டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஹெலிக்கொப்டர் விபத்து ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 உற்பட 6பேர் மரணம்.

அமெரிக்காவின் நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர்.
ஸ்பெயினை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேர் பயணித்த ஹெலிக்கொப்டர் தலைகீழாக ஆற்றிற்குள் விழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு படகுகளை அனுப்பியதாக தீயணைப்பு பிரிவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நீச்சல் வீரர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள்,ஹெலிக்கொப்டரிலிருந்து கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் ஆனால் அது பலனளிக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நால்வர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

