DIMO நிறுவனத்தின் நீண்டகால மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிக நிபுணத்துவம் கொண்ட பிரிவுகளில் ஒன்றான DIMO Engine Care பிரிவானது, ஒரு முக்கிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பாரம்பரிய நிபுணத்துவம் சார்ந்த ஒரு பணிமனையிலிருந்து (workshop), நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் வசதியாக அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலான எஞ்சின்களின் முழுமையான திருத்த வேலைகள் (engine overhauling) மற்றும் இயந்திர பணிகளை (machining) கையாளுவதில் நிறுவனத்தின் ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவமானது…
1.5KG ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்
இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் ராமநாதபுரம் சுங்கத்திணைக்களம் அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டை, செருப்பு, பீடி இலை பண்டல்கள், பூச்சிக்கொல்லி, உரம், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய,இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கண்காணிப்பையும் மீறி போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.