1000 ஆங்கில வார்த்தைகளை கூறி 21/2 வயது சிறுமியின் சாதனை.

சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி நாள்,காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள், அன்றாட நடவடிக்கை உள்ளிட்ட 1000ம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில சொற்களை மிக லாவகமாக கூறி அசத்துகின்றார்.

சிறுமியின் இந்த அசாத்திய திறமையினை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதியாகவும் தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளனர். சிறுமியின் எதிர்காலத்திற்க்காக அம்மா கல்வி கற்க ஆரம்பித்தார். அதனை கேட்டே வளர்ந்த சிறுமி அம்மா சில இடங்களில் சிந்திக்கும் போது சில சொற்களை எடுத்துச்சொல்லும் போதே பெற்றோர்களுக்கு தனது மக்களுக்குள் இப்படி ஒரு திறமை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சிறுமி இதுவரை ஏடு தொடக்கப்படாத நிலையில் இத்தகைய அதிசிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் சாதனை தொடர்பாக தெரிவிக்க, சிறுமியின் பெற்றோர் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை 6நடத்தினார்.

இந்த சிறுமியின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *