In a significant event for the sustainable tourism sector, a Q&A media session featuring prominent Environment and Development Global Leader Erik Solheim, is set to take place on January 25, 2026. The theme of the discussion is “Achieving Profitability through Sustainable Tourism”. The symposium is hosted by Thema Collections in collaboration with the Sustainable Tourism…
345 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு நிலப்பகுதிக்கு மாற்றப்பட்ட 300 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவினர் இன்று (12) அதிகாலையில் கைது செய்தனர்.
கிரிந்த, அந்தகலவெல்ல கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திஸ்ஸமஹாராம பகுதிக்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.
அதன்படி, ஆழ்கடலில் இருந்து பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள், சிறிய படகு ஒன்றுக்கு மாற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.
சிறிய படகில் கடற்கரையை நோக்கி கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள், கயிறு ஒன்றின் உதவியுடன் கடலில் மிதக்கவிடப்பட்ட நிலையில், அவற்றை எடுத்துச் செல்ல வந்த 7 சந்தேகநபர்கள் கடற்கரையில் வைத்துப் பொலிஸாரால் முதலில் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கடற்கரைப் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

