A month-long Iftar celebration across Graze Kitchen inspired by the rich culinary traditions of the Middle East. Hilton Colombo invites guests to observe the season of Ramadan with ‘A Middle Eastern Flair,’ a specially curated Iftar celebration taking place from 17 February to 18 March 2026 at Graze Kitchen. Inspired by the time-honored traditions of…
43நாடுகளுக்கு ட்ரம்ப் அரசாங்கம் விதிக்கவுள்ள புதிய தடை
ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின் பல்வேறு புதிய கொள்கைகள் மற்றும் தடைகளை விதித்துவரும் நிலையில் தற்பொழுது சுமார் 43 நாடுகளின் குடிமக்களை இலக்கு வைத்து அமெரிக்கா பயணத் தடையை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருகிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் ஆப்கானிஸ்தான், பூட்டான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 11 நாடுகள் “சிவப்பு பட்டியலில்” உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா விசாக்களில் பயணிக்கக்கூடிய “செம்மஞ்சள்” பட்டியலில் 10 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளின், பணக்கார வணிகப் பயணிகள், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் புலம்பெயர்ந்தோர் அல்லது சுற்றுலா விசாக்களில் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் இந்நாட்டு குடிமக்கள் விசா பெறுவதற்கு கட்டாயம் நேரில் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் பெலாரஸ், எரித்திரியா, ஹெய்ட்டி, லாவோஸ், மியான்மார், பாகிஸ்தான், ரஷ்யா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை அடங்கும்.
இதனை தவிர திட்டத்தில் 22 நாடுகளின் வரைவு “மஞ்சள்” பட்டியலில் அடங்கப்பட்டுள்ளன.
அங்கோலா, என்டிகுவா, பார்புடா, பெனின், புர்கினா பாசோ, கம்போடியா, கெமரூன், கேப் வெர்டே, சாட், கொங்கோ குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, டொமினிகா, எக்குவடோரியல் கினியா, காம்பியா, லைபீரியா, மலாவி, மாலி, மவுரித்தேனியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, சாவோ டோம் மற்றும் பிரின்சிப், வனுவாட்டு மற்றும் சிம்பாப்வே ஆகியவையே மஞ்சள் பட்டியலில் அடங்கும் நாடுகள்

