டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
5 கோடி பெறுமதி கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது

மீன்களை ஏற்றிச் செல்லும் லொறியில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் துன்கல்பிட்டிய பொலிஸாரால் இன்று (ஏப்ரல் 09) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
துன்கல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது லொறியிலிருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 5 கோடியே 50 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 35 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை துன்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.