டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
51 சக்திபீடங்களில் முதன்மையான திருகோணமலை ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

தெட்சண கைலாயம் எனப்படுவதும் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரர் வீற்றிருக்கும் திருகோணமலையில் எழுந்தருளி அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி , சக்தி பீடங்களில் முதன்மையானதும் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சித்திரை மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45க்கு தம்ப பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் 10.00 மணிக்கு திருவிழா இடம்பெற்று பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம், 3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை, மாலை 4.15 மணிக்கு தம்பபூஜை, மாலை 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 6.00 மணிக்கு திருவிழா இடம்பெற்று 7.30 மணிக்கு நிறைவு பெறும்.






01.04.2025 – முதலாம் திருவிழா – காராம்பசு வாகனம்
02.04.2025 – இரண்டாம் திருவிழா – மகர வாகனம்
03.04.2025 – மூன்றாம் திருவிழா – சர்ப்ப வாகனம்
04.04.2025 – நான்காம் திருவிழா – அன்ன வாகனம்
05.04.2025 – ஐந்தாம் திருவிழா – மஞ்சம்
06.04.2025 – ஆறாம் திருவிழா – கைலாக வாகனம்
07.04.2025 – ஏழாம் திருவிழா – சிம்ம வாகனம்
08.04.2025 – எட்டாம் திருவிழா – குதிரை வாகனம்
09.04.2025 – ஒன்பதாம் திருவிழா – சப்பறத்திருவிழா
10.04.2025 – தேர் திருவிழா
11.04.2025 – தீர்த்தோற்ஸவம்
12.04.2025 – பூங்காவனம் இடம்பெற திருவுளம் பெற்றுள்ளது.