டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
62 வங்கிகளில் கொள்ளையடித்த மக்கள் விடுதலை முன்னனி

1985 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
பாதீடு தொடர்பான விவாதத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் வங்கிகளைக் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார்.
மேலும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் 62 வங்கிகளைக் கொள்ளையடித்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் போது வங்கிகளிலிருந்து பணத்தையும் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார்.