பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.