பட்டலந்தை அறிக்கையில் உள்ள பலரின் பெயர்கள் கசிவு.

“பட்டலந்தை சித்திரவதைக் கூடம்” தொடர்பில் காவல்துறை அதிகாரிகளான டக்லஸ் பீரிஸ், நளின் தெல்கொட, மெரில் குணவர்தன ஆகியோர் உட்படப் பலரின் பெயர்கள் பட்டலந்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு உள்ளதாக பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறித்த சித்திரவதைக் கூடம் செயற்பட்டு வந்த உரக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பட்டலந்தை வீடமைப்பு தொகுதி கைத்தொழில் அமைச்சின் கீழ் இருந்தது.

இந்த அமைச்சு ரணில் விக்கிரமசிங்கவின் வசமிருந்தது, குறித்த வீடமைப்பு தொகுதியில் அவருக்கும் வீடு மற்றும் அலுவலகம் என்பனவும் இருந்தன.

டக்ளஸ் பீரிஸ் போன்றோரும் அங்குத் தங்கியிருந்தனர். அதனை அண்மித்ததாக இராணுவ முகாமும் இருந்தது. இவற்றை நோக்கும்போது, குறித்த சித்திரவதைக் கூடத்துக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்துகொள்ள முடியும் என குமார் குணரத்னம் தெரிவித்தார்.

இதில் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்லாது ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, ஜே.ஆர்.ஜயவர்தனவின் மகன் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு நெருக்கமாக அதிகாரிகளைக் கொண்டு இதனைச் செயற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது எனவும் பட்டலந்தை ஆணைக்குழுவின் பல பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு அப்போதைய அரசாங்கம் தவறியுள்ளது எனவும் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *