அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வாகன இறக்குமதிக்காக கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதிக்காக இதுவரை 150 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை மீள நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் 26ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதிக்காக வங்கிகள் திறக்கும் கடன் கடிதங்கள் தினசரி அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பொருளாதாரம் பெரிய அதிர்ச்சியை உணராத வகையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.