இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
சரணடைந்த தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

தலைமறைவாக இருந்ததாக கருதப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன் இன்று (மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (மார்ச் 20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர், இன்று(மார்ச் 19) காலை தனது வழக்கறிஞர்களுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் முடிவு செய்தது.
அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையிலேயே அவர் இன்று(மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் சரணடை