Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a Memorandum of Understanding (MoU) today, a significant step toward strengthening international collaboration and fostering workplace well-being. The partnership is aimed at fostering mutual development and promoting a culture of “Health and Productivity Management” across Sri Lanka’s corporate sector. Held in…
தேநீர் தானம் மூலம் சிவனொளிபாதமலைக்கு மிதமான வெப்பத்தை கொண்டுவரும் கொட்டகல கஹட்ட.

இலங்கை, கொழும்பு, 2025 பெப்ரவரி 21: உயர் ரக இலங்கை தேயிலைக்கு பெயர் பெற்ற கொட்டகல கஹட்ட, இவ்வருட யாத்திரை பருவ காலத்தில் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், புனித சிவனொளிபாதமலையில் (பாவா ஆதமலையில்) தனது வருடாந்த தேநீர் தானத்தை (தன்சல்) பெருமையுடன் முன்னெடுத்திருந்தது. யாத்திரிக காலம் முழுவதும் வார இறுதி நாட்களில் இடம்பெறும் இந்த நிகழ்வானது, புகழ்பெற்ற மலை உச்சிக்கு சவாலான பயணத்தை மேற்கொண்ட அனைவருக்கும் கருப்பட்டியுடன் கொட்டகல கஹட்ட மிதமான தேநீரை இலவசமாக வழங்குகின்றது.
விருந்தினர்களுக்கு தேநீர் வழங்கும் பாரம்பரியம் இலங்கையின் போற்றப்படும் பழக்கமாகும். இது நாட்டின் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அந்த வகையில் தேநீர் தானத்தை ஏற்பாடு செய்ததன் மூலம், நாட்டின் வளமான தேயிலை பாரம்பரியத்தை கொண்டாடும் அதே வேளையில் தான் பெற்றதிலிருந்து சமூகத்திற்கு மீள கொடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை கொட்டகல கஹட்ட நிரூபித்துள்ளது. இந்த நிகழ்வானது, உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளை வரவேற்றிருந்ததோடு, அவர்கள் சிவனொளி பாதமலை உச்சியின் அமைதியான மற்றும் ஆன்மீக சூழ்நிலையில் நறுமணமிக்க மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தேநீரை சுவைக்க வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.
இவ்வர்த்தகநாமம் தேநீர் தானம் திட்டத்தின் மூலம் சமூகத்துடன் ஆழமான தொடர்பை வளர்த்து, இலங்கையின் வளமான தேயிலை பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறது. இந்த திட்டமானது, யாத்திரிகர்கள் மற்றும் வருகை தருவோருக்கு சூடான தேநீரை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாக அமைகின்றது. இந்த கூடாரத்தில், கொட்டகல கஹட்ட குழுவினர் பக்தி கீதங்களையும் பாடினர். இது அங்கு வருபவர்களின் மன உறுதியை அதிகரித்தது. இந்த பாரம்பரியத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் இதை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வர்த்தகநாமம் விரும்புகிறது. இந்த அர்த்தமுள்ள அனுபவத்தில் பங்கேற்கவும், யாத்திரை காலம் முழுவதும் தொடச்சியாக இடம்பெறும் தேநீர் தானத்தில் ஒரு தேநீர் கோப்பையை அருந்தவும், கொட்டகல கஹட்ட அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
கொட்டகல கஹட்ட தேநீர் தான கூடாரமானது, ஹட்டன் பாதையில் உள்ள ஜப்பான்-இலங்கை சமாதான விகாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இது யாத்திரிகர்கள் மற்றும் வருகை தருவோருக்கு மிகவும் அவசியமான ஓய்வை வழங்குகிறது. கொட்டகல கஹட்டவில் அங்கம் வகிக்கும் தன்னார்வலர்கள் தேநீரை அன்புடன் பரிமாறி, தோழமையையும் மகிழ்ச்சியின் உணர்வையும் வழங்குகின்றனர்.
இவ்வருடம் தேநீர் தானம் இலங்கையை காட்சிப்படுத்தும் தாராள மனப்பான்மை மற்றும் கலாசார பெருமிதத்தை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டியது. அனைத்து தரப்பு மக்களுடனும் நாட்டின் அடையாளமான பானத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம், தற்கால உலகில் சமூகம் மற்றும் பாரம்பரியத்தின் நீடித்த முக்கியத்துவத்தை கொட்டகல கஹட்ட உறுதிப்படுத்தியுள்ளது.
கொட்டகல கஹட்ட உலகளாவிய ரீதியில் போற்றப்படும் இலங்கையின் தேயிலை தொழில்துறையின் பெருமைமிக்க தூதுவராக விளங்குகிறது. தேநீர் தானம் போன்ற அர்த்தமுள்ள முயற்சிகள் மூலம், கொட்டகல கஹட்ட தேயிலையை ஒப்பிட முடியாததாக மாற்றும் தனித்துவமான விருந்தோம்பல் மற்றும் வளமான பாரம்பரியத்தை இவ்வர்த்தகநாமம் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.
120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட C.W. Mackie PLC நிறுவனம், கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது அதன் பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல் மற்றும் இறக்குமதி செய்வதில் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றது. இந்த பல்துறை வணிக நிறுவனத்தின், விரைவாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் (FMCG) பிரிவான Scan Products Division, பாரம்பரிய வர்த்தகம், நவீன வர்த்தகம், HORECA (ஹோட்டல், உணவகம் மற்றும் கேட்டரிங்) ஊடாகவும், நிறுவனங்களுக்கான விநியோகம் மூலமும் பல்வேறு நுகர்வோர் சந்தைகளில் நுழைவதற்கு ஒரு ஹைபிரிட் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இதன் தயாரிப்பு வகைகளில் சன்குயிக், ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ், ஸ்கேன் ஸனக்ஸ், கொட்டகல கஹட்ட, டெலிஷ் ஜெலி, ஸ்கேன் நாம குடிநீர் போத்தல், KVC தயாரிப்புகள் (பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்), N-Joy தேங்காயெண்ணெய் மற்றும் ஸ்டார் பிராண்ட் சுவை மற்றும் நறுமணமூட்டிகள் போன்ற சிறந்த வர்த்தகநாமங்களை உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தும் அந்தந்த பிரிவுகளில் சந்தையில் முன்னணி தயாரிப்புகளாக மாறி இலங்கை நுகர்வோர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.