உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றன. 

இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *