டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் டி.எம்.யு.எம். திசாநாயக்க, விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஏ.ஜே. விஷாந்த, பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு, மேலதிகமாக சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.