Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a Memorandum of Understanding (MoU) today, a significant step toward strengthening international collaboration and fostering workplace well-being. The partnership is aimed at fostering mutual development and promoting a culture of “Health and Productivity Management” across Sri Lanka’s corporate sector. Held in…
ஏப்ரல் மாதத்தில் வருடாந்த Joe-Pete Big Match ஏற்பாடு

கொழும்பு, 25 மார்ச் 2025 – வருடாந்த புனிதர்களின் சமர் என அழைக்கப்படும் 51ஆவது Joe-Pete மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டி தொடர்பில் அறிவிக்கும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தில் 2025 மார்ச் 25 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் பாடசாலை கிரிக்கட் போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டித் தொடராக கருதப்படும் இந்த போட்டித் தொடரின் இந்த ஆண்டின் போட்டிகள் பற்றிய அறிவிப்பு இதன் போது வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் புனித சூசையப்பர் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரியின் அதிபர்கள், அணியின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் மற்றும் Josephian-Peterite இணைந்த கிரிக்கட் கழகத்தின் அங்கத்தவர்கள் அடங்கலாக பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இரு பாடசாலைகளும் நீண்ட கிரிக்கட் வரலாற்றைக் கொண்டிருப்பதுடன், அருட் தந்தை மொரிஸ் ஜே லெகொக் கிண்ணம் மற்றும் அருட் தந்தை பீற்றர் ஏ.பிள்ளை கிண்ணம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டின் 91ஆவது புனிதர்களுக்கிடையிலான சமர் மூன்று நாள் கிரிக்கட் போட்டிகள், வரலாற்றில் முதலாவதாக இரு பாடசாலைகளுக்கிடையே நீண்ட காலமாக முன்னெடுக்கப்படும் போட்டியாக அமைந்திருப்பதுடன், கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் 2025 ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பெருமைக்குரிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு, உலகளாவிய ரீதியிலிருந்து ஆயிரக் கணக்கான சூசையப்பர் மற்றும் பேதுரு கல்லூரியின் பழைய மாணவர்களை கவர்வதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 51ஆவது ஒரு நாள் போட்டி, ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
புனித சூசையப்பர் கல்லூரி 12 வெற்றிகளுடன் முன்னிலை வகிப்பதுடன், புனித பேதுரு கல்லூரி 10 வெற்றிகளுடன் காணப்படுகிறது. இரு அணிகளும் அருட் தந்தை மொரிஸ் ஜே லெகொக் கிண்ணத்துக்காக கடுமையாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ரஞ்சித் அந்திராதி கருத்துத் தெரிவிக்கையில், “Joe-Pete போட்டி என்பது, இலங்கையின் பாடசாலை கிரிக்கட் நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. 91ஆவது தடவையாக முன்னெடுக்கப்படும் இந்த போட்டியினூடாக, இரு பாடசாலை அணிகளுக்குமிடையிலான போட்டித் தன்மை வெளிப்படுத்தப்படுவது மாத்திரமன்றி, நூற்றாண்டு மைல்கல்லை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
புனிதர்களின் சமர் தொடர்பில் கொழும்பு புனித. பேதுரு கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ரோஹித ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “புனிதர்களின் சமர் என்பது புனித. சூசையப்பர் மற்றும் புனித. பேதுரு கல்லூரிகளுக்கிடையிலான பெருமைக்குரிய முன்னணி கிரிக்கட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு இரு அணிகளும், முதலாவது மூன்று நாள் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் என வரலாற்றில் இடம்பெறுவர். பீற்றர் மற்றும் ஜோசப் பழைய மாணவர்களை இணைத்து விறுவிறுப்பான போட்டியை இவர்கள் வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இரு பாடசாலைகளுக்கும், அவற்றின் அணித் தலைவர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
புனித சூசையப்பர் கல்லூரியின் தலைவராக – கெனத் லியனகே செயற்படுவதுடன், அதன் உப தலைவராக – அபிஷேக் ஜயவீர செயலாற்றுவார். புனித பேதுரு கல்லூரியின் தலைவராக – ஒவீன் சல்காடோ மற்றும் உப தலைவராக லஷ்மிக பெரேரா ஆகியோர் திகழ்வர்.
‘JoePete 2025’ போட்டித் தொடருக்கு பிளாட்டினம் அனுசரணையை Marina Square, Keells, மற்றும் Elephant House ஆகியன வழங்குவதுடன், தொடர்ச்சியான 9ஆவது வருடமாகவும் இலங்கையின் முன்னணி விளையாட்டு ஊக்குவிப்பாளரான Dialog Axiata இணைந்துள்ளது. தங்க அனுசரணையாளர்களாக Jetwing Hotels, Russell’s catering மற்றும் Nestle ஆகியன இணைந்துள்ளதுடன்; வெள்ளி அனுசரணையாளர்களில் – HNB, Hayley’s, Uswatte, Amro, Utrax Capital, Uber, Aarons Clothing, Hemas Hospitals, மற்றும் The Papare ஆகியன இணைந்துள்ளன; Dominos, Aitken Spence Travels, Yes FM, Emerging Media, Nutrifix, Alliance finance, மற்றும் CBL ஆகியன வெண்கல அனுசரணையாளர்களாக இணைந்துள்ளன. இந்த வர்த்தக நாமங்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அனுசரணையினூடாக Joe-Pete கிரிக்கட்டின் புகழ் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடு நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் நிலையில், எதிர்பார்ப்புகளும் அதிகரித்த வண்ணமுள்ளன. இலங்கையின் முன்னணி கத்தோலிக்க ஆண்கள் பாடசாலைகள் மீண்டும் ஒரு தடவை களத்தில் மோதவுள்ள நிலையில், போட்டிகளுக்கான நாட்கள் நெருங்கி வருகையில், எஸ்எஸ்சி மைதானத்தின் மீது அனைவரின் கவனம் திரும்ப ஆரம்பித்துள்ளது.

