Homegrown finance company Siyapatha Finance PLC successfully unveiled its 65th branch in Chunnakam, Jaffna, further strengthening the Company’s presence in the Northern region of Sri Lanka. The branch was declared open by Siyapatha Finance PLC Chief Executive Officer (CEO) Mr. Mathisha Hewavitharana, in the presence of Chief Operating Officer (COO) Mr. Rajeev De Silva, Ms.P.Shanmugapriya,…
தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்.
தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து வெகு நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேசபந்து தென்னகோன் சரணடைந்தார்.
அதன் பின் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் மாத்தறை நீதவான நீதிமன்றத்தில் மீண்டும்
முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவருக்கு நீதிமன்றம் விளக்கமறியலை நீட்டித்து
அதேநேரம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்றையதினம்(ஏப்ரல் 03) தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.