இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன்(ஏப்ரல் 02) ஒப்பிடும் போது, இன்றையதினம் (ஏப்ரல் 03) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,970 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 241,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 28,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 230,800 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்கத்தின் விலை நிலவரங்களின் படி
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 249,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 230,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.