Hettich அனுபவ மையம், அதிநவீன Hettich இணைப்புகளுடன் பொருத்தப்பட்ட தளபாடங்களின் சிறந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உலகின் முன்னணி தளபாட இணைப்புகளின் உற்பத்தியாளரான Hettich, தங்களால் நேரடியாக இயக்கப்படும் தங்களுக்குச் சொந்தமான அனுபவ மையத்தை கொழும்பில் மிக விமர்சையாகத் திறந்து வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள Hettich நிறுவனத்தின் உயர் முகாமைத்துவ அதிகாரிகிகள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் கட்டடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வானது, இலங்கை மக்களுக்கு Hettich வர்த்தகநாமத்தின் அதிசயம் மிக்க உள்ளக வடிவமைப்புத் தீர்வுகளை…
ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரமானந்த மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (ஏப்ரல் 04) கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.