இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
நுவரெலியா மலர் கண்காட்சி இன்றும், நாளையும்

நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால கொண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இன்று (18) விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த மலர் கண்காட்சி இன்றும் (18) நாளையும் (19) ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளையும், பார்வையளர்களை மிகுதியாய் கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விக்டோரியா பூங்கா முழுவதும் புதிதாக நடப்பட்ட பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது
மலர் கண்காட்சி ஆரம்பித்ததையடுத்து விக்டோரியா பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளனர் இவ்வாறு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் இங்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக மலர்கள் மூலம் அலங்காரம் செய்துள்ள பறவைகள் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்தும் வருகின்றனர் ,
நுவரெலியாவில் ஏப்ரல் மாதம் முழுவதும் வசந்த காலம் என்பதால் எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.










