உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 5 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை

யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தைக்கு திங்கட்கிழமை (21) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
குழந்தைக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில் செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (22) மாலை குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.