கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை
ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த சிறப்புக் கூட்டத்தின் போது, இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இந்த முன்மொழிவை முன்வைத்தனர், ஆனால் ஜனாதிபதி அதற்கு உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், சபை நிதி ரீதியாக நிலையற்றதாகிவிடும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியமும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணங்களைப் பராமரிப்பதால் நிதி ஸ்திரமின்மை ஏற்படாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கைக்கு மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் மறுசீரமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.