பல்கலைக்கழக மரணம் குறித்து விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் அறிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் தங்களது விரிவுரையாளர்கள் சம்மேளனம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க கருத்து வௌியிடுகையில், இந்த துயர சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *