65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள்
இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியினுள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

