கொழும்பு, இலங்கை, ஜுன் 2026 – சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆகாயத்தாமரையை (ஜப்பான் ஜபர) பொறுப்புடன் நிர்வகிப்பதன் ஊடாக, அதனை ஒரு பெறுமதிமிக்க புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக நிலைநிறுத்துவதற்குச் சுறுசுறுப்புடன் பங்களித்து வருகின்றது. இதற்காக அமெரிக்காவின் Scott Dunn நிறுவனம் மற்றும் ‘Conservation Collective’ ஆகியன ஒன்றிணைந்து, இந்த ஆய்வு மற்றும் வேலைத்திட்டத் தொடருக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன. இலங்கை சுற்றுச்சூழல் நிதியம் (Lanka Environment Fund) இதன் உள்ளூர் பங்காளராகச் செயற்படுவதுடன், அவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘The…
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு
பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர்.
இதன்போது மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதே தந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்தநிலையில், சமனலவெவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை அளுத்நுவர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.