டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
தபால் ரயிலில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

இரண்டு நாள் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால், இன்று (01) முதல் இரவு தபால் ரயிலில் ஒரு தபால் பெட்டியை மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை-பதுளை மற்றும் கோட்டை-காலி இரவு தபால் ரயில்களில் ஒரு தபால் பெட்டி மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களாக தபால் பெட்டிகள் தபால் ரயிலில் இருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.