உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பற்றி பெப்ரல் அமைப்பு விளக்கம்

வெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற ஊடகவியலாளர்கள் சந்திந்தப்பின் போது உள்ளுராட்சிமன்ற அதிகாரசபை தேர்தல் பற்றிய ரோஹண ஹெட்டியாராச்சி வழங்கினார்.
உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளின் சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அன்றில் இருந்து 52 – 66 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு சட்டமூலம் அடங்கிய வர்த்தமானி வெயிடப்பட்ட பின் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துவிடும். அதன் பின் அவர்கள் அதற்க்கான ஆயத்தங்களை செய்வார்கள்.குறிப்பாக குறித்த சட்ட மூலத்தில் 3 மாதங்களுக்குள் வேட்புமனுவைக் கோருவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும். ஆனால் அவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள், தமிழ் – சிங்கள புத்தாண்டு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தேர்தல் ஆணைக்குழுவின் கடைமையாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இளைஞர் மற்றும் பெண்களுக்கான கோட்டா தொடர்பில் வேட்புமனுவின் போது கட்சிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். காரணம் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுகளை மிக அவதானமாக வரையறையிட்டு செய்யவேண்டும் என்றும் அதனை தாம் கண்காணிப்போம் என்றும் கூறினார்.