பண்டிகைக் காலத்தை முன்னிட்டு செலான் அட்டைகள் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்துகின்றன

செலான் வங்கி பிஎல்சி, அதன் கடனட்டை மற்றும் வரவட்டை வாடிக்கையாளர்களுக்கு 50% வரை தள்ளுபடியுடனான சிறப்பு சலுகைகளை உள்ளடக்கிய Seylan Offer Rushஐ அறிவித்துள்ளது. இச் சலுகைகள் 2025, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும். செலான் அட்டைகள், அற்புதமான விலைக் கழிவுகள் மற்றும் பிரத்தியேக உணவருந்தும் சலுகைகளுடன் இவ்வாண்டின் நத்தார் பண்டிகை மகிழ்ச்சியை சற்று முன்னதாகவே கொண்டு வருகின்றது.

இந்த ஊக்குவிப்பானது அட்டை வாடிக்கையாளர்களுக்கு, தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஆடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சலுகைகளை வழங்குவதுடன் உள்ளூர் பயணங்கள், online ஷொப்பிங் மற்றும் வாழ்க்கை முறை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிகளவான கொள்வனவுகளை மேற்கொள்ள உதவுகிறது. செலான் வங்கி, Softlogic Brands, Cool Planet, Fashion Bug, NOLIMIT, DSI, Velona, ​​மற்றும் Spa Ceylon உள்ளிட்ட முன்னணி வணிகர்களுடன் இணைந்து ஆடைகளுக்கு 33% வரையிலான விலைக் கழிவுகளையும் ஏனைய கவர்ச்சிகரமான சலுகைகளையும் வழங்குகிறது. மேலும், தம்ரோவும் சிங்கரும் call-and-convert அடிப்படையில் 0%இல் 24 மாத தவணைத் திட்டங்களை வழங்குகின்றன.

ரூ.100,000இற்கு மேற்பட்ட மற்றும் அதிகபட்சமாக ரூ.3 மில்லியன் வரையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள், செலான் Easy Pay தவணைத் திட்டம் ஊடாக 36 மாதங்கள் வரை 0% வட்டியை அனுபவிக்கலாம்.  இச் சலுகை, ஒக்டோபர் 31 வரை மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் செல்லுபடியாகும்.

இந்த ஊக்குவிப்பின் மற்றொரு சிறப்பம்சம், இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க விடுதிகளில் அட்டை வாடிக்கையாளர்களுக்கான இலவச உணவருந்தும் சலுகை ஆகும். இதற்காக Hilton Colombo, Cinnamon Lakeside, Cinnamon Red, Cinnamon Grand, Waters Edge, Amari Colombo, Galle Face Hotel, Shangri-La Colombo மற்றும் ITC Ratnadeepa ஆகியவற்றுடன் செலான் வங்கி கைகோர்த்துள்ளது.

இந்த ஊக்குவிப்பு குறித்து செலான் வங்கியின் அட்டைகள் பிரிவுத் தலைவர் ருசித் லியனகே கூறுகையில், “இச் சிறப்பு ஊக்குவிப்பின் ஊடாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை உற்சாகத்தை முன்னதாகவே அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்க விரும்பினோம். எங்கள் வாடிக்கையாளர்கள் நவநாகரிக ஆடையணிகள், உணவருந்தும் மற்றும் வாழ்க்கைமுறை அனுபவங்கள் வரை நாட்டின் மிகவும் நம்பகமான மற்றும் முன்னணி வர்த்தக நாமங்களின் ஒப்பிடமுடியாத மதிப்பு, சௌகரியம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அனுபவிப்பதை செலான் அட்டைகள் உறுதி செய்கின்றது.” என்றார்.

அத்தியாவசிய தேவைகளுக்கான இன்றியமையாத அட்டையாக செலான் அட்டைகள், அதன் வணிகர் வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி நன்மையளிக்கும் பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள், 2025 டிசம்பர் 31 வரை சூரிய மின்சக்தி, வெளிநாட்டு பயணம், காப்புறுதி மற்றும் சுகாதார பிரிவுகளிற்கு 0% தவணைத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இது நாளாந்த செலவுகள் முதல் வாழ்வின் முக்கிய கொள்முதல்கள் வரை நம்பிக்கையுடன் இணைந்திருக்கும் சரியான துணையாக செலான் அட்டைகளை வலுப்படுத்துகிறது.

இந்த பிரத்தியேக சலுகைகள் பற்றிய மேலதிக தகவல்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், செலான் அட்டைகளின் விசேட தொலைபேசி இலக்கமான 011-200 88 88 ஐ தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *