மித்தெனிய முக்கொலை – கைதானவர்கள் குறித்து வௌியான தகவல்

மித்தெனியவில் அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனை சுட்டுக் கொண்ட கொலையாளிகள் பற்றிய மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முக்கொலைகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய பொலிஸ் பிரிவின் தெபொக்காவ பகுதியிலும், வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் அக்ரஹெர சந்தியிலும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடையவர்கள் என்றும், வலஸ்முல்ல மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதும், அவர்கள் இராணுவத்தை விட்டு தப்பிச் சென்று பின்னர் சட்டரீதியாக
அதிலிருந்து வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *