Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்பைஇலங்கை முழுவதும் கொண்டு வரும் Coca-Cola
கொழும்பு, 2026 பெப்ரவரி 16: வேகம், விவேகம் மற்றும் அதிரடி நிறைந்த ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு திருவிழாவாகும். அந்தத் துடிப்பான ஆற்றலுக்கு இணையாக, இலங்கை முழுவதிலுமுள்ள வீதிகளுக்கே அந்தப் பரவசத்தை நேரடியாகக் கொண்டு வரும் வகையில், ரசிகர்களுக்காகப் பல விசேட மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை Coca-Cola நிறுவனம் நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கொண்டாட்டங்களின் முன்னணியில் Coca-Cola முத்திரை பதித்த பாரஊர்தி (Truck) திகழ்கிறது. ஒரு சிறிய கிரிக்கெட் ஆடுகளத்துடன் நகரின் பல பகுதிகளுக்கும் செல்லும் இந்தப் பாரஊர்தி, கிரிக்கெட் விளையாட்டின் நகரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இப் பாரஊர்தியில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்தில் ரசிகர்கள் அதிரடியான சிக்ஸர்கள் மற்றும் பவுண்டறிகளை விளாசுவதுடன், ஒருவருக்கொருவர் நட்புறவுப் போட்டிகளிலும் (Face-offs) ஈடுபட முடியும். இது அனைத்து ரசிகர்களையும் விளையாட்டில் நேரடியாகப் பங்கேற்று T20 உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்பை அனுபவிக்க அழைக்கின்றது. துடிப்பான இசை, உற்சாகமான மக்கள் கூட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரத்தக்க அழகிய தருணங்களுடன், இந்தப் பாரஊர்தி கிரிக்கெட் பிரியர்களின் பிரதான மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. இங்குள்ள மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு பிளாஸ்டிக் போத்தலுடன் இணைத்து கிரிக்கெட் மட்டையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட விசேட ‘மட்டைப் பிடி’ (Bat handle) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையாகும். இதனைக் கொண்டு ரசிகர்கள் தங்களின் தனித்துவமான கிரிக்கெட் ஷொட்களை விளையாடி மகிழலாம்.
இலங்கையின் துடிப்பான ஆற்றலின் மையமாக கிரிக்கெட்டும் இளைஞர் கலாச்சாரமும் விளங்குகின்றன. எமது ‘ரசிகர் பாரஊர்தி’ (Fan Truck) அனுபவத்தின் ஊடாக இவை இரண்டையும் ஒன்றிணைப்பதில் Coca-Cola பெருமிதம் கொள்கிறது. இந்தப் பாரஊர்தி கொழும்பு முழுவதும் பயணிக்கும் வேளையில், இளம் ரசிகர்கள் கிரிக்கெட் மீதான தங்களின் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் இணைந்து அந்த உற்சாகத்தைக் கொண்டாடவும் ஒரு தளத்தை நாங்கள் வழங்குகின்றோம். கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது எமது நாட்டின் ஒருமித்த தேசிய உணர்வாகும். அந்த உணர்வின் ஒரு பகுதியாக ரசிகர்களை மாற்றுவதே எமது நோக்கமாகும்’ என Coca-Cola நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் மரியோ பெரேரா தெரிவித்தார்.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டும் வகையில், Coca-Cola நிறுவனம் ‘மினி பரேட்’ (Mini Parade) எனும் பிரமாண்டமான வீதி உலாவை முன்னெடுத்துள்ளது. இது சாதாரண வீதிகளை ஒரு நகரும் திருவிழாவாக மாற்றும் வகையில் மிகவும் உற்சாகமான வீதி நிகழ்வாக அமைந்துள்ளது. Coca-Cola-வின் முத்திரை பதிக்கப்பட்ட ஜீப் வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்கும் இந்த ஊர்வலத்தில், உணர்வைத் தூண்டும் நேரடி பாப்பரே இசை மற்றும் Coca-Cola-வின் பிரத்தியேக சின்னத்தின் (Mascot) வருகை என இந்த ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் வர்ணஜாலங்களையும், தாள லயங்களையும், பெரும் உற்சாகத்தையும் எங்கும் பரப்புகின்றன. ஐசிசி T20 உலகக் கிண்ணத்தைப் போன்றே, இந்த ஊர்வலமும் மிகுந்த துடிப்புடனும், எவராலும் தவிர்க்க முடியாத ஒரு பிரம்மாண்ட அனுபவமாகவும் அமைகிறது.
போட்டி ஆரம்பமானதும் இந்தக் கொண்டாட்டங்கள் ஓய்ந்துவிடுவதில்லை. நாடு முழுவதுமுள்ள ‘ரசிகர் பூங்காக்களுடன் (Fan Parks) கைகோர்த்துள்ள Coca-Cola, அங்கு நேரடிப் போட்டி ஒளிபரப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் பொது இடங்களை ரசிகர்களின் ஆரவாரமிக்க விளையாட்டு மைதானங்களாக மாற்றியுள்ளது. பிரம்மாண்டத் திரைகள், உற்சாகம் ததும்பும் மக்கள் கூட்டம் மற்றும் குளிர்ந்த Coca-Cola ஆகியன இணைந்து, ரசிகர்கள் ஒவ்வொரு சிக்ஸரையும் கொண்டாடுவதற்கும், விக்கெட்டுகளைப் பதற்றத்துடன் ரசிப்பதற்கும், T20 கிரிக்கெட்டின் விறுவிறுப்பை ஒன்றாக அனுபவிப்பதற்கும் ஒரு சிறந்த களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.
இந்தச் செயல்பாடுகள் கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு, குருநாகல், காலி மற்றும் கண்டி உள்ளிட்ட 14 முக்கிய இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம், T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் விறுவிறுப்பும், உற்சாகமும் விளையாட்டு மைதானங்களுக்கு அப்பால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எதிரொலிப்பதை Coca-Cola நிறுவனம் உறுதிசெய்கின்றது.
துடிப்பான களச் செயல்பாடுகள், வீதியெங்கும் நிறைந்திருக்கும் உற்சாகம் மற்றும் மறக்க முடியாத பல தருணங்கள் ஆகியவற்றின் ஊடாக, ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணம் என்பது வெறும் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு மாத்திரமல்ல, அது முழுமையாக அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை Coca-Cola மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகின்றது. தற்போது இலங்கை முழுவதும் அந்த விளையாட்டு உணர்வு உண்மையான அர்த்தத்தில் முழுவீச்சில் சூடுபிடித்துள்ளது.
Just landed on seu bet.com and it looks clean and organized. Easier to find what I’m looking for. Worth a visit. seu bet.com
Want to find ‘playpix oficial’ without getting scammed? This is the real deal. Don’t risk clicking on dodgy ads, use this: playpix oficial
Vina24 mb… I’m curious! Going to investigate for myself. Hope it’s a good find! Find more info at: vina24 mb