அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எரிபொருள் விலை குறித்து வௌியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், பெட்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.