7 News Pulse

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள் – எதிர்கட்சிதலைவர்.

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி, மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களனி பிரதேசத்தில் நேற்று (வெப்ரவரி 16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.  சொன்னவற்றை செய்ய முடியாமல் தடுமாறும் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனவும், இந்த அரசாங்கம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை மீறி செயட்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Read More

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(வெப்ரவரி 16) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நீண்டகாலமாக கட்சியின் பொதுச்செயலாளரக கடமையாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து கட்சியின் துணைச்செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இத்தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்படவில்லை என்பதனையும் பகிரங்கமாக ஊடகங்களுக்கு கட்சியின்…

Read More

“பிடியளவு கமநிலத்துக்கு” திட்டம் தற்போது உப்புவேலி முத்துநகரில் ஆரம்பம்.

இலங்கை முழுவதுமாக வினைத்திறன் மிக்க விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டமான “பிடியளவு கமநிலத்துக்கு”எனும் திட்டம் நேற்று (வெப்ரவரி 15) திருகோணமலை மாவட்ட உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு உற்பட்ட முத்துநகர் பகுதியில் ஆரம்பமானது. உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் முத்துநகர், தகரவெட்டுவான், மத்தியவேலி, அம்மன்குலம் ஆகிய விவசாய சம்மேளனங்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது உப்புவேலி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.தர்ஷானந்தன் தலைமையில் இடம்பெற்றது. விவசாயத்தை ஊக்குவிக்கும் இத்திட்டத்தின்…

Read More

அவசர அவசரமாக கூடவுள்ள உச்சி மாநாடு.

உக்ரைன் குறித்து அமெரிக்கா ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் அவசர அவசரமாக சந்திப்பொன்றை செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறவுள்ள இந்தமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உட்பட பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். சுமுகமான ஒரு அணுகுமுறையை உக்ரைனிற்கான சமாதானத்தில் உருவாக்குவதற்காக ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் இணைப்பதே தனது பணி என பிரிட்டிஸ் பிரதமர் கூறியதோடு ஐரோப்பிய தலைவர்களுடன் இந்த மாநாட்டில்…

Read More

புதிதாக உதயமான அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சட்டரீதியாகவும், திறமையை வளர்க்கும் பங்காற்றலோடும், சரீர உதவிகளை வழங்குவதற்கும், சமூக மற்றும் தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடும் இந்த புதிய அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று (வெப்ரவரி 16) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அய்யாவுக்கான…

Read More

இலங்கையில் சாபக்கேடாக மாறும் சிறுநீரக நோய்!

இலங்கையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோயினால்ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். கடந்த 10வருடங்களில் இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதோடு, சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் நாட்டில் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் வெளியிட்ட தகவலில் வெளியிடப்பட்டுள்ளது. உடனடி சிகிச்சை பெறமுடியாத நாள்ப்பட்ட சிறுநீரக நோயாளர்களே இவ்வாறு மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற…

Read More

அரச ஊழியர்களின் சம்பளம் வாய்ப்புள்ளது…!

நாளை(வெப்ரவரி 17) புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சர்க்கப்படவுள்ளநிலையில் அரச ஊழியர்களின் ஊதிய உயர்வுகளையும் , புதிய நியமங்களையும் எதிர்பார்த்துள்ளதாக அரசஊழியர்களும், வேலையில்லா பட்டதாரிகளும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இன்றைய இலங்கையில் பொருளாதாரத்தலம்பலின் மத்தியில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைக்கு அமைவாக அமையும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

SLINTEC ආයතනය,  Inovartic Investment Lanka (Pvt) Ltd සමාගම සමග ග්‍රැෆීන් තාක්ෂණික ගිවිසුමකට එළඹෙයි

2025 ජනවාරි, කොළඹ – ශ්‍රී ලංකා නැනෝ තාක්ෂණ ආයතනය (SLINTEC), ග්‍රැෆීන් මත පදනම් වූ තෙල් අවශෝෂණය කර ගන්නා අමුද්‍රව්‍යයක් නිර්මාණයකර එය බාර දීමට කටයුතු කළ බව පසුගියදා නිවේදනය කළේය. මෙතෙක් නොවූ විරූ ආකාරයේ කාර්යක්ෂමතාවකින් යුතුව මහා පරිමාණයෙන් පරිසරයට මුදා හැරෙන තෙල් අවශෝෂණයකර ගැනීමට හැකි පරිදි මෙය නිර්මාණයකර ඇත. ශ්‍රී ලංකාවේදී පර්යේෂණ සහ සංවර්ධන කටයුතු සිදුකර…

Read More

முதன்முறையாக படம்பிடிக்கப்பட்ட கடல் சாத்தான்

கருப்பு கடற்பறவை என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆழ்கடல் ராட்சத ஆங்லர்ஃபிஷ் சமீபத்தில் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃப் கடற்கரையில் ஒளி நிறைந்த நீல நீரில் அரிதாகத் தோன்றியிருக்கின்றது. இந்தவகை கடல் சாத்தன் மீன்கள் பொதுவாக ஆழ்கடலில் வாழ்வதால் இதுவே அது படமாக்கப்படுவது முதல் முறையாகும்.அண்ணல் இந்த வகை மீன் ஏன் இவ்வளவு ஆழமற்ற நீர் பரப்புக்கு வந்ததென்பது தெரியவில்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண் ஆங்லர்ஃபிஷ்கள் தங்கள் தலையில் உள்ள “மீன்பிடி கம்பம்” போன்ற அமைப்பிற்க்காய்…

Read More