Doneproduction

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி

தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது. வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு…

Read More

மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில்,…

Read More

மட்டக்களப்பு மார்க்கத்தில் தொடருந்து சேவை பாதிப்பு

மட்டக்களப்பு தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பகுதியில் தொடருந்து ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Read More

உப்பு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பேக்கரி உற்பத்திகள்

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நாங்கள் அமைச்சருக்கும் இது குறித்து அறிவித்திருக்கிறோம். அமைச்சர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதற்காக காத்திருக்கிறோம். ஏனெனில், பேக்கரிகளுக்கு உப்பு கட்டிகள் தேவையில்லை, பெரும்பாலும் உப்பு தூள் பயன்படுத்தப்படுகிறது. உப்பு…

Read More

கம்போடிய தூதுவர் – பிரதமர் சந்திப்பு!

புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (16) சந்தித்தார்.  தூதுவர் ராத் மானியை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.  இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை தூதுவர் ராத் முன்மொழிந்தார். இது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை விளக்கினார்.  கம்போடிய சுற்றுலாப் பயணிகளுக்கு…

Read More

முதல் நாளில் சூரியின் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல்

சம்மர் விடுமுறை ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புத்தம் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா லக்ஷ்மி அவருக்கு ஜோடியாக நடிக்க மாமன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அவர்களை தாண்டி ராஜ்கிரண், பாலா சரவணன், ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் அதாவது தாய் மாமனின் பொறுப்புகளை சொலலம் இந்த படம் குடும்ப ரசிகர்களிடம் முதல் நாளே நல்ல ரீச்…

Read More

விடியலை ரசிக்க ஹோட்டல் கதவை திறந்தவருக்கு ஹாய் சொன்ன ராஜநாகம்

விடுமுறையை உற்சாமாக கழிக்க ஹோட்டலுக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் நபர் காலை விடிந்ததும் சூரிய வெளிச்சத்தை காண அறையின் ஜன்னலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்தார். ஒரு பெரிய பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து செல்வதை கண்டார். மேலும் அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு…

Read More

உலகையே உலுக்குமளவுக்குப் போராட்டம் நடத்துவோம்! – சுமந்திரன் எச்சரிக்கை

“வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே…

Read More

குறுந்தூர ரயில்கள் மட்டுமே இன்று இயங்கும்

இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். அதன்படி, நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது. இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்து, மேற்படி பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக…

Read More