கம்போடிய தூதுவர் – பிரதமர் சந்திப்பு!

புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (16) சந்தித்தார்.  தூதுவர் ராத் மானியை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.  இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை தூதுவர் ராத் முன்மொழிந்தார். இது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை விளக்கினார்.  கம்போடிய சுற்றுலாப் பயணிகளுக்கு…

Read More

உலகையே உலுக்குமளவுக்குப் போராட்டம் நடத்துவோம்! – சுமந்திரன் எச்சரிக்கை

“வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே…

Read More

குறுந்தூர ரயில்கள் மட்டுமே இன்று இயங்கும்

இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். அதன்படி, நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது. இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்து, மேற்படி பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக…

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 42 வயதுடைய காயமடைந்த ஆணும், 70 வயதுடைய பெண்ணும் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்த…

Read More

ரயில் நிலைய பொறுப்பதிகாரிககளின் வேலை நிறுத்தம் நியாயமற்றது – போக்குவரத்து சபை

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (16) நள்ளிரவு முதல் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் செய்தல் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு முக்கிய…

Read More

இருவேறு பகுதிகளில் இருவர் மர்மமான முறையில் மரணம்

வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (15) இரவு மேற்படி நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் துங்கம, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணித்தவர் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து சுமார் 8 வருடங்களாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த மரணம் சில நாட்களுக்கு…

Read More

பவுசர் விபத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர் கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் 13,000 லீற்றர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பவுசரில் பெட்ரோல் 13,800 லீட்டர் மற்றும் டீசல் 13,200 லீற்றர் ஏற்றிச் சென்ற போது ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்ட பகுதியில் வைத்து , ​​பவுசர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பவுசர் மூலம் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள்…

Read More

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்த 6 பேர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சட்டவிரோதமான…

Read More

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள்.

அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி சரக்கு விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS வகையான வாகனங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இலங்கையின் சந்தை பெறுமதிக்கு அமைய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II காரின் விலை…

Read More