அமெரிக்காவில் மேலும் பல அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஆலோசகர்ரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். உள்துறை, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக…

Read More

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது, சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

90ஸ் கிட்ஸ்சின் கிரிக்கட் ஆதர்ச நாயகர்கள் கலந்து கலக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) வெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

விளையாட்டுகளில் கணவான்கள் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் என்றும் குறைவதில்லை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ஆதர்ச நாயகர்கள் என்று அழைக்கப்படும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வேபெற்ற வீரர்கள் மீண்டும் களத்தில் கலக்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இதனை அறிந்தே சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. டி20 பாணியில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெப்ரவரி 22ம்…

Read More

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு.

பாப்பரசர் பிரான்ஸிஸின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வத்திக்கான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14) திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு

இந்தியாவின் மத்திய அரசினால் த.வெ.க கட்சியின் தலைவர் திரு.விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆய்வுசெய்து வழங்கப்பட்ட மாநில உளவுத்துறையின் அறிக்கையின் படி மத்திய அரசால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வகையான பாதுகாப்புஇதற்க்கு முன் திரு.கருணாநிதி, திரு.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்ச்சியாக இருந்த போதும் கரும்பூனை படை (BLACK CATS) எனும் பெயரில் வழங்கப்பட்டது. இந்த கரும்பூனைப்படை பாதுகாப்பினை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் VIP பாதுகாப்பாக CRPF மாற்றினார். அதில் 6வகை பிரிவுகள்…

Read More

மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் அனுப்பிய கடிதம்.

இலங்கையில் உத்தேசிக்கப்பட்ட 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான பின்னணி , ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களினூடாக மின்சார செலவைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் அந்நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்களுடனான காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை மீள் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதனால் அரசு அந்த ஆலைகளுக்கான அனுமதியை வழங்காமல்…

Read More

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்! சூடுபிடிக்கும் சர்வதேச அரசியல் களம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ள நிலையில் அமெரிக்காவில் வழக்கம்போல் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதிவியேற்று அதிரடிமுடிவுகள் பல எடுத்துவரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கை , நாடு கடத்தப்படும் இந்தியர்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More