பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி அட்டவணை அறிவிப்பு

10வது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் ( PSL) போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டி ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற உள்ளது. 6 அணிகள் விளையாடும் போட்டியில் 34 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் போட்டி ஏப்ரல் 11 ஆம் திகதி நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் இரண்டு முறை பிஎஸ்எல் சாம்பியனான லாகூர் கிலாண்டர்ஸ் இடையே நடைபெறும். இந்த போட்டி நடைபெறும் காலத்திலேயே ஐபிஎல் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது….

Read More

சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது உலக மீன் சந்தையில் 8% பங்கு வகிக்கும் இந்தியா, கடந்த ஆண்டு மீன் ஏற்றுமதியில் 7000 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சர்வதேச மீன் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலின்படி, கடந்த ஆண்டு, சீனா 67.80 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 18.40 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.

Read More

கோலாகலமாக ஆரம்பமான ஜெர்மனியின் “தெரு திருவிழா”

ஜெர்மனியின் கலாச்சார பாரம்பரியங்களில் ஒன்றான தெரு திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது கொலோன் நகரில் வண்ணமயமான ஆடைஅணிந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெண்கள் திருவிழா, கவுன்ட் டவுன் உடன் இவ்விழா ஆரம்பமானது இந்த தெரு திருவிழாவில் விதவிதமான ஆடை அணிந்திருந்த பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

இலங்கையின் துறைமுக முதலீடுகளுக்கு தயாராகும் நெதர்லாந்து

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலா, துறைமுகம், முதலீட்டு துறைகளின்…

Read More

பஹ்ரைன் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பஹ்ரைன் செல்பவர்கள் சுற்றுலா விசா மூலம் பஹ்ரைனுக்குள் பிரவேசித்து அனுசரணை இன்றி அதனை பணியாளர் விசாவாக மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள் காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அங்கு சுற்றுலா விசாவை அனுசரணையுடன் பணி விசாவாக மாற்றுவதை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தொழில்…

Read More

உலகம் போற்றும் மகா சிவராத்திரி தினம் இன்று

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களிலும் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன

Read More

வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை இல்லை.

வங்கக்கடலில் இன்று(வெப்ரவரி 25) காலை 6.10 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.1ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கெண்டகியில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுநர் உரிமம் பதிவு அலுவலக வளாகத்திலேயே மர்ம நபர் ஒருவரால்இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது

Read More

சீனாவில் பரவும் புதிய வைரஸ்

சீனாவில் புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவிட் 19 தொற்றினை போன்றே இந்த புதிய தொற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த வைரஸ் கோவிட் வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுவதுடன்இது மனிதர்களின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

டிரம்ப் – எலான்கூட்டணி – சூடுபிடிக்கும் அரசியல் அரசியல்களமும்.

எப்போதும் வெளிப்படையாக தனது கருத்தினை முன்வைப்பவரும் , கொலை முயட்சியில் இருந்து தப்பியவருமான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி, கருத்து மற்றும் எழுத்துச்சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நேரடியாக அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க்கை சாடி தெரிவித்துள்ளார். மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா? என்ற கேள்விக்கு, எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு இடையூறு விளைவிக்கின்றார் என எழுத்தாளர் சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார். மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை எனவும், அவரது…

Read More