டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
“CLEAN SRILANKA ” வேலைத்திட்டத்திற்கு இந்தோனேசியா உதவி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது.
புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் இரு நாடுகளுக்கும் இடையிலான 70 வருட நட்புறவை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் புதிய அரசாங்கங்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாகவும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு அவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை இந்தோனேசியாவிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகால மற்றும் சுதந்திர வர்த்தக்க ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை பலப்படுத்திக்கொண்டு இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் சந்தைகளை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.