முன்னர் SmithKline Beecham Private Limited, என்று அறியப்பட்டதும் தற்போது முன்னணி நுகர்வோர் சுகாதாரப் பராமரிப்பு தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ள Haleon Sri Lanka, 2026ஆம் ஆண்டின் உலக வாய் சுகாதார தினத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. கடந்த மார்ச் 4ஆம் திகதி இடம்பெற்ற விழாவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் திகதி கொண்டாடப்படும் உலக வாய் சுகாதார தினத்தின்…
Haleon, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக வாய் சுகாதார தினம் 2026இன் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் இணைந்துள்ளது
முன்னர் SmithKline Beecham Private Limited, என்று அறியப்பட்டதும் தற்போது முன்னணி நுகர்வோர் சுகாதாரப் பராமரிப்பு தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ள Haleon Sri Lanka, 2026ஆம் ஆண்டின் உலக வாய் சுகாதார தினத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. கடந்த மார்ச் 4ஆம் திகதி இடம்பெற்ற விழாவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் திகதி கொண்டாடப்படும் உலக வாய் சுகாதார தினத்தின் இவ்வாண்டுக் கருப்பொருள், “மகிழ்ச்சியான வாய், மகிழ்ச்சியான வாழ்க்கை” (A happy mouth is a happy life) என்பதாகும். இது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் வாய் சுகாதாரம் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.
இப் புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை, இலங்கையர்களை வாய் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் சிறந்த தினசரி பராமரிப்புக்கான முதல் படியை எடுக்கவும் ஊக்குவிக்கின்றது. SLDA உடன் இணைந்து Haleon முன்னெடுக்கும் இவ்வொரு மாத காலப் பிரச்சாரத்தின் ஊடாக நாடெங்கிலும் அர்த்தமுள்ள வாய் சுகாதார நன்மைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் மக்களை நோய் ஏற்பட்ட பின்னரான சிகிச்சை அணுகுமுறையிலிருந்து முன்கூட்டியே உடல்நலத்தை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை அணுகுமுறைக்கு மாற்ற எண்ணியுள்ளது.
இம் முயற்சியின் ஒரு பகுதியாக, நாடெங்கிலும் இலவச பல் பரிசோதனைகள் வழங்கப்படும். இதில் கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெறும் உலக வாய் சுகாதார தின சிறப்பு நிகழ்வும் உள்ளடங்கும். இதன் மூலம் சமூகங்களை இலக்கு வைத்த வாய் சுகாதாரக் கல்வி, பற்களிற்கான உணர்திறன் சோதனைகள் (Sensitivity Test) மற்றும் சரியான வாய் சுகாதார நடைமுறைகள் குறித்த ஆலோசனைகள் நேரடியாக வழங்கப்படும். இப் பிரச்சாரம் ஊடாக இலங்கை முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப் பிரச்சாரத்தில் SLDA உறுப்பினர்களின் உற்சாகமான பங்கேற்பானது தரமான பல் பராமரிப்பை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற உதவும்.
பாரம்பரிய ஊடகங்களிலும் டிஜிட்டல் தளங்களிலும் வலுவான இருப்பால் முன்னெடுக்கப்படும் இந்த ஒத்துழைப்பு, வாய் சுகாதார சேவைகள் குறித்த விழிப்புணர்வையும் அவற்றிற்கான அணுகலையும் மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் மனிதநேயத்துடன் சிறந்த அன்றாட உடல்நலத்தை வழங்குதல் என்ற Haleon நிறுவனத்தின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
1956இல் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்கிய Haleon Sri Lanka, சென்சோடைன், பனடோல், அயோடெக்ஸ் மற்றும் ENO உள்ளிட்ட நம்பகமான வர்த்தகநாமங்கள் மூலம் சிறந்த தினசரி ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.

If you’re looking for a fun puzzle challenge, squid game jigsaw 2 is a great pick! It features classic jigsaw gameplay with a cool Squid Game theme. Perfect for relaxing and testing your puzzle-solving skills with vibrant images. Give it a try if you enjoy this type of brain teaser!
If you’re looking for a spooky good time, you’ve got to check out halloween tiles! This puzzle game is packed with creepy crawlies and thrilling challenges that will keep you hooked. With its engaging gameplay and festive theme, it’s the perfect way to get into the Halloween spirit. Highly recommended for all puzzle enthusiasts!