COLOMBO, July 31, 2025: Uber, the global ride-hailing and delivery platform, today concluded the second edition of Uber Springboard – an initiative designed to support the next generation of Sri Lankan entrepreneurs through mentorship, guidance, and international exposure. In collaboration with the Ministry of Digital Economy, Government of Sri Lanka, five promising startups were selected…
HNB LankaQRக்கான வர்த்தகதள்ளுபடி விகிதம் (MDR) நீக்கப்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அணுகல் மேலும் விரிவாக்கப்படுகிறது

நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாக, HNB தனது டிஜிட்டல் கொடுப்பனவு தளமான HNB SOLO வழியாக LankaQR பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி விகிதத்தை (MDR) நீக்கியுள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள வணிகங்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகள் மேலும் அணுகலாகவும் மகிழ்ச்சிகரமான விலையிலும் கிடைப்பதே இதன் நோக்கம்.
அதிகமான மக்கள் கடைகளுக்குச் செல்லும் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் பரபரப்பான காலமான புத்தாண்டு காலத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் இந்த முயற்சி குறிப்பாக குறிப்பிடத்தக்கது. பணத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டிய தேவையை நீக்குவதன் மூலம், வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் இடையூறு இல்லாத, வசதியான கொடுப்பனவு அனுபவத்தை இது வழங்குகிறது.
இந்த முன்முயற்சியை HNB நிறுவனம் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, குறிப்பாக பண்டிகைக் காலத்தை குறிவைத்து. இது முதலில் 2025 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும், அதிகரித்த வாடிக்கையாளர் ஓட்டம் மற்றும் கொடுக்கல் வாங்களின் அளவு காலகட்டத்தில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதற்காக. பணம் கையாளுதலை நீக்குவதன் மூலம், வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரும் ஒரு சுமூகமான மற்றும் வசதியான கட்டண அனுபவத்தைப் பெறுகின்றனர்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த, HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தாமித் பல்லேவத்த “எங்கள் QR தீர்வுடன் இன்று சந்தையில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளோம். வணிகர்கள் அனைவரையும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைமையில் சேர்ப்பதற்கு தேவையானவற்றை நாங்கள் தெளிவாக புரிந்துள்ளோம். மிகப்பெரிய வணிகர் வலையமைப்பை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது அவர்களின் வணிகங்களை விரிவுபடுத்த வங்கி முறைமைகளுக்கான அணுகலை உருவாக்குகிறது.” என தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில், வாடிக்கையாளர் கொடுப்பனவுகளை நவீனமயமாக்குவதற்காக இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் LankaPay ஆகியவை இணைந்து LANKAQR முறையை அறிமுகப்படுத்தின. டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள வணிகர்களுக்கு எளிதான, பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் குறிக்கோளாக இருந்தது. இந்த முயற்சி டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்குவதையும், அதிகமான மக்கள் நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. LANKAQR என்பது சர்வதேச EMVCO தரநிலைகளைப் பின்பற்றி பல்வேறு வங்கிகள் மற்றும் கட்டண முறைகளில் செயல்படும் ஒரு வகை QR குறியீடு ஆகும். இது LANKAQR வழியாக பணம் செலுத்தும் வசதியை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து LANKAQR செயற்படுத்தப்பட்ட எந்தவொரு மொபைல் செயலியையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்த அனுமதிக்கிறது. இன்று, இலங்கையில் 22 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளன, அவை வணிகர்களுக்கு LANKAQR வழியாக பணம் செலுத்தும் வசதியை வழங்குகின்றன, மேலும் LANKAQR ஐ ஆதரிக்கும் 30 மொபைல் Appகளும் உள்ளன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் பணிப்பாளர் வசந்த அல்விஸ்,
“நாட்டில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பது அவசியமாகும், ஏற்கனவே கணிசமான அளவிலான கொடுக்கல் வாங்கல்கள் இந்த தளங்கள் மூலம் நடைபெறுகின்றன. மத்திய வங்கியாக, இத்தகைய முன்முயற்சிகள் மற்றும் பிரச்சாரங்களை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அனைத்து வங்கிகளையும் இதே போன்ற முயற்சிகளில் ஈடுபடுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம், ஏனெனில் இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கும்.” என தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் மாத்திரம், இலங்கையின் இண்டர்-பேங்க் பணக் கொடுக்கல் வாங்கல்கள் 483 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது, இதன் மொத்த மதிப்பு 35 டிரில்லியன் ரூபாவாகும்.
வணிகர்கள் இப்போது Static மற்றும் Dynamic QR குறியீடுகளைப் பயன்படுத்தி உடனடி கட்டணங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் எந்தவொரு மேலதிக கட்டணமும் இல்லாமல் பணம் பெறலாம். இதில், 10,000 ரூபாவுக்குக் குறைவான LANKAQR கொடுக்கல் வாங்கல்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது, அதேசமயம் 1,000 ரூபாவுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு நிலையான MDR கட்டணம் பொருந்தும்.
இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான LankaPay ஆல் இயக்கப்படும் மற்றும் LankaQR வலையமைப்புடன் இணைக்கப்பட்ட SOLO வணிகர்களாக, 25க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் QR-அடிப்படையிலான கொடுப்பனவுகளை செயல்படுத்த முடியும். MDR கட்டணங்களை நீக்குவதன் மூலம், HNB அனைத்து வணிகர்களிடையேயும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

