சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை அறிவிப்பு.

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக் மட்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள பாடசாலைகளில் 27ம் திகதி வழக்கம் போல் கல்விநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு ஆளுநர் அறிவிப்பு. விடுமுறை நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை தொடர்ந்துவரும் சனிக்கிழமை(மார்ச் 1) அன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஐஸ் போதைப்பொருளோடு 23வயதுடைய இளைஞர் ஒருவர் கைது.

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (வெப்ரவரி 21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு, முகத்துவாரம் போகஹ சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு வெல்லம்பிட்டி…

Read More

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை மறுதினம்(வெப்ரவரி 24) முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்…

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கித்தாரர்கள் மட்டக்குளியில் பொலிசாரால் சுட்டுக்கொலை.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று(வெப்ரவரி 21) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிசார், கைதுசெய்யப்பட்ட இரு துப்பாக்கிதாரிகளையும் அழைத்துச் சென்றபோது பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த…

Read More

குற்றச்செயலை தடுப்பதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் அறிந்தவர்கள் அல்லது அயலவர்கள் மற்றும் சமூகத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட பொலிஸாரால் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் குற்றவாளி விளக்கமறியலில்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை தடுத்து வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கொழும்பு குற்றப்பிரிவு குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான்…

Read More

மித்தெனிய முக்கொலை – கைதானவர்கள் குறித்து வௌியான தகவல்

மித்தெனியவில் அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனை சுட்டுக் கொண்ட கொலையாளிகள் பற்றிய மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவின் தெபொக்காவ பகுதியிலும், வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் அக்ரஹெர சந்தியிலும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடையவர்கள் என்றும், வலஸ்முல்ல மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில்…

Read More

17 மீனவர்கள் கைது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிப்ரவரி 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.  இவர்கள் கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.  இதனுடன், 12 மீன்பிடி படகுகள், ஒரு மோட்டார் சைக்கிள், 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள்…

Read More

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்.

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 25ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளன. அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட…

Read More

கொழும்பில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.

கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – அத்துருகிரிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். குறித்த நபர் 100இற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.இந்த மோசடியை அவர் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More