பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது, சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

90ஸ் கிட்ஸ்சின் கிரிக்கட் ஆதர்ச நாயகர்கள் கலந்து கலக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) வெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

விளையாட்டுகளில் கணவான்கள் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் என்றும் குறைவதில்லை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ஆதர்ச நாயகர்கள் என்று அழைக்கப்படும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வேபெற்ற வீரர்கள் மீண்டும் களத்தில் கலக்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இதனை அறிந்தே சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. டி20 பாணியில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெப்ரவரி 22ம்…

Read More

காதல், கவிதை என பெயர் சூட்டிய கமல்.

பாடலாசிரியர் சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தங்களுடைய சமூகவலைத்தளத்தினூடாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். எப்பொழுதும் கமலை நலன்விரும்பியாக கருதும் சினேகன் தங்கள் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வாங்க கமலை நேற்று(வெப்ரவரி 14) குடும்பமாகச்சென்று சந்தித்திருந்தார். அப்பொழுது கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்கும் ‘காதல்’, ‘கவிதை’ எனக்பெயர் சூட்டி தங்க வளையல்களையும் பரிசளித்துள்ளார். இது குறித்து அவர்கள் இவ்வாறு தங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ”காதலர் தினத்தில் … எங்கள் தங்க…

Read More

நயன் – விக்கியின் “தீமா தீமா” பாடல் ரீல்ஸ் .

இந்திய திரையுலகில் காதல் டு கல்யாணம் பண்ணின ஜோடிகளில் விக்கி – நயன் ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம். அதேமாதிரி அந்த ஜோடியும் சந்தோசமோ, துக்கமோ, காதலோ ரசிகர்களோடு எப்பவும் பகிர்ந்துக்குவாங்க. அந்த மாதிரி அவங்க காதலர்தின வாழ்த்துக்களையும், தங்களோட காதலையும் ஒரேயொரு ரீல்ஸ் செய்து வெளிக்காட்டி இருக்காங்க. விக்னேஷ் சிவன், அவர் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ‘தீமா தீமா’ என்ற பாடலை தன்னோட நயன் மற்றும் உயிர்,உலக மனத்துல வச்சு எழுதினது சொல்லியிருந்தார். அந்தப்பாடல்…

Read More

இசையமைப்பாளர் தமனுக்கு கிடைத்த “போர்ஷே”.

பிரபல தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘Akhanda, Veera Simha Reddy, Bhagavanth Kesari, Daaku Maharaaj’ போன்ற திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக பின்னணி இசையை அட்டகாசமாக தந்தவர் இசையமைப்பாளர் தமன்.குறிப்பாக ‘Akhanda’ படத்தின் BGM பாலய்யா ரசிகர்களின் ரிங் டோனாகவே மாறும் அளவிற்கு வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ‘Akhanda 2: Thandavam’ தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இந்த திரைப்படத்துக்கு தமன்னே இசையமைக்கின்றார். இந்நிலையில் திடீரென பாலய்யா, இசையமைப்பாளர் தமனுக்கு ‘போர்ஷே’ சொகுசுக் காரைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாலய்யா,…

Read More

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு.

பாப்பரசர் பிரான்ஸிஸின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வத்திக்கான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14) திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் கூடுதலாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அத்தோடு காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி…

Read More

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.

அநுராதபுரம், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சனிக்கிழமையான இன்று (வெப்ரவரி 15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக, ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார ஆய்வாளர் கைது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் பணியாற்றிவந்த பொது சுகாதார ஆய்வாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஹோட்டலின் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.200,000 லஞ்சம் பெற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பேருந்து விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (வெப்ரவரி 15) அதிகாலை 4 மணியளவில் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது. விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம் என கூறப்படுவதுடன்விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More