சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த ஒருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (22) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை சூரியபாலுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அழகுக்கலை நிபுணர் ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More

அதிக வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும் ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம்…

Read More

முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு நகரத்தின் பிரதான கடற்கரையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. “சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப்…

Read More

Unilever Sri Lanka inaugurates its Foods Factory for its brands Viva and Horlicks.

Unilever Sri Lanka inaugurated a new Foods Factory at the Lindal Industrial Processing Zone in Sapugaskanda, graced by the Honourable Sunil Handunneththi, Minister of Industry and Entrepreneurship Development. The construction commenced during the economic crisis and reinforces Unilever Sri Lanka’s strategy to strengthen local manufacturing. This not only removes the pressure on forex but also…

Read More

Will the Grid be stable? Advancing Solar PV Integration: A Vision for a Sustainable Energy Future Article Attributed To: Prof. Lilantha Samaranayake, Dean of the Faculty of Engineering at the University of Peradeniya.

During the Eng. (Prof.) R. H. Paul Memorial Oration 2025, Prof. Lilantha Samaranayake emphasised the urgent need for advanced solar photovoltaic (PV) integration to create a resilient and sustainable energy future. Speaking on the Future of Renewable Energy, he highlighted projections from the International Energy Agency (IEA) that forecast global renewable electricity generation will exceed…

Read More

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கெண்டகியில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுநர் உரிமம் பதிவு அலுவலக வளாகத்திலேயே மர்ம நபர் ஒருவரால்இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது

Read More

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

140,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 25 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி…

Read More

நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை

ஹிக்கடுவ நாரிகம கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் இறந்தவர் 38 வயதான ரஷ்ய நாட்டவர் என்பதுடன் அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக இலங்கைக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிர்காப்பாளர்கள் அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது.

Read More

கிளிநொச்சியில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள தேங்காய் உற்பத்தி

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தென்னை செய்கையில் பெறப்படும் தேங்காயின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனால் தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் வெண் ஈ தாக்கம் காரணமாக பல தடவைகள் மருந்துகள் தெளிக்கப்பட்டிருந்த போதிலும் பிரயோசனமற்ற நிலையில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More