மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அச்சுவெளி –  தெற்கு கரத்தடி வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் புத்தூர் – ஆவரங்கல், பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அச்சுவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பொத்துவில் வனப்பகுதியில் கஞ்சா செய்கை முற்றுகை: துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

பொத்துவில் – பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை சாஸ்திரவேலி முகாமின் அதிகாரிகள் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 01¼ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 03 கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, 60,000 கஞ்சா செடிகள் மற்றும் இரண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு…

Read More

ஒடேசாவில் ரஷ்ய தாக்குதல் தீவிரம் – மின்வெட்டு, துறைமுகங்களுக்கு கடும் பாதிப்பு

தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக பரவலான மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கும் கடும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. உக்ரைனின் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, ஒடேசாவை குறிவைத்து ரஷ்யா திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து நடைபெறும் இந்த தாக்குதல்கள், உக்ரேனின் கடல்சார் தளவாடங்கள் மற்றும் கடல் வழித் தொடர்புகளை முடக்குவதற்கான முயற்சியே என ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் தொடக்கத்தில் கருங்கடலில்…

Read More

கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத  சேவை நாளை முதல் ஆரம்பம் – புகையிரத திணைக்களம்

பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் புதன்கிழமை (24) முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. ண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ் தேவி புகையிரதம் புதன்கிழமை (24) காலை 06.40 மணியவில் கொழும்பு கோட்டை  புகையிரத நிலையத்தை நோக்கி புறப்பட்டு, பகல் 02.32 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. அதேபோல் புதன்கிழமை (24) காலை…

Read More

புதிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை வெளியீடு

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு 2025.12.05 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் முன்மொழியப்பட்ட வலுவூட்டல் நிகழ்ச்சியில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் திறமையாகவும், திறம்படவும் செயற்படுத்துவதற்காக புதிய சேர்த்தல்கள், தெளிவுப்படுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கிய வகையில் வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், வணிக கட்டிட உரிமையாளர்கள்,…

Read More

கொழும்பு மாநகர சபை வரவு–செலவு: வருமான இலக்குகள் நடைமுறைக்கு ஏற்றதா? – கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு–செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எதிர்பார்க்கப்பட்ட வருமானங்கள் ஆவணத்தில் அழகாக தோன்றினாலும், அவை நடைமுறையில் சாத்தியமா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் எச்.எம். மன்சில் தெரிவித்தார். இந்த வருமான இலக்குகளை அடைவதற்காக வரி செலுத்தும் மக்கள்மீது கூடுதல் சுமை விதிக்கப்படுமானால், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள கொழும்பு மாநகர…

Read More

டெக்சாஸில் மெக்சிகன் கடற்படை விமான விபத்து: 5 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் கால்வெஸ்டன் (Galveston) அருகே திங்கட்கிழமை (23) மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இளம் மருத்துவ நோயாளி ஒருவரை உட்பட மொத்தம் எட்டு பேரை ஏற்றிச் சென்ற இந்த விமான விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குப் பின்னர், டெக்சாஸ் கடற்கரையை ஒட்டிய நீர்ப்பரப்பில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோ கடற்படை வெளியிட்ட அறிக்கையின் படி, விமானத்தில் நான்கு கடற்படை அதிகாரிகளும், ஒரு குழந்தை உட்பட…

Read More

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு புதிய மறுசீரமைப்பு தேவை – 121 உலக பொருளியலாளர்கள் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், நாட்டின் கடன் நெருக்கடிக்கு நீடித்த தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக 121 உலக பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் உட்பட இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வெளியகக் கடன் மீள்செலுத்துதலை…

Read More

கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நுகேகொடை மற்றும் கொஹுவல சந்திப்புக்கு இடையில் நேற்று இரவு(22.12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு நகரம் முழுவதும் பொலிஸார் கூடுதல் உத்தியோகத்தர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 25 வயதுடைய இளைஞர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக கொழும்பு களுபொவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துக்குப் பொறுப்பான சந்தேக நபர் முச்சக்கர வண்டியில்…

Read More

வவுனியாவில் கிரவல் அகழ்விற்கு எதிராக போராட்டம்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்ய கோரி  பொதுமக்களால் இன்று(22.12.2025) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், கிரவல் அகழ்வால் எமது கிராமமே குன்றும் குழியுமாக உள்ளது. எனவே கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிரவல் அகழ்விற்கான அனுமதியை வழங்குவதை…

Read More