கிளிநொச்சியில் கடந்த வருடம் கசிப்பு சார் குற்றங்கள் ; மூவாயிரம் பேர் கைது!

கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன்போதே, கடந்த வருடம் கசிப்புக் காய்ச்சிய, விற்பனையில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட, சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டு…

Read More

இலஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கு விளக்கமறியல்!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.  விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் புதன்கிழமை (21) காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரிடம்…

Read More

ஹம்பேகமுவ மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளில் பாரிய கஞ்சா வேட்டை : 3 பேர் கைது!

ஹம்பேகமுவ – சிரிபுர வனப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒ்ன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு சந்தேகநபர்கள் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பில் சுமார் 12,580 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு, சான்றுகளாக மாதிரிகளை எடுக்கப்பட்ட பின்னர், தீ வைத்து அழிக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த, 51 மற்றும் 63 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

“புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்” பெப்ரவரி 04 ஆம் திகதி ஆரம்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில்  நடைபெறும். அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்…

Read More

கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய  பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று புதன்கிழமை (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை…

Read More

ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது – நாமல் ராஜபக்ஷ!

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. கதிர்காமத்துக்கு செல்வதற்கு தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற தித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.போராட்டத்தில்…

Read More

அஸ்வெசும திட்டத் தகவல் சேகரிப்பில் முறைகேடு : ஆயிரக்கணக்கான ஏழைகள் புறக்கணிப்பு – எம்.எஸ். உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அஸ்வெசும திட்டத்தின் பயனாளர்களின் தகவல்களை பெறுவதற்காக இளைஞர் குழு ஒன்றை நியமனம் செய்து அஸ்வெசும திட்டத்தில் ஒரு வீட்டின் தகவல்களை தருபவருக்கு 300 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட தகவல்களினால் அம்பாறை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (21)   இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள்…

Read More

ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் – சபாநாயகர்

பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஒரு நாட்டில் அதன் மக்கள் தங்களுடைய கலாசார பன்முகத் தன்மையைப் பாதுகாத்து ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த 15ஆம் திகதி கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு…

Read More

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தை உறுதிப்படுத்துங்கள் ; இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்து

சட்டமா அதிபரைக் குறிவைத்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. குறித்த சமூக ஊடகப் பதிவுகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுயாதீனத்தன்மையில் நியாயமற்ற முறையில் தலையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றவியல் விவகாரங்களைப் பொறுத்தமட்டில், சட்டமா அதிபர் ஒரு பகுதியளவு நீதித்துறை சார்ந்த கடமையை ஆற்றுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், ஒரு சந்தேக நபருக்கு எதிராகக் குற்றம்…

Read More

கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வக் கற்பாறை

கண்டி மாவட்டத்தில் கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அபூர்வக் கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தித்வா சூறாவளியினால் குறித்த ஆலய வளாகத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவினை தொடர்ந்து குறித்த கற்பாறை ஆலய வளாகத்திற்கு வந்துள்ளதாகவும்,  கற்பாறையின் ஒரு பகுதி நீல நிறத்தில் காட்சியளிப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கலஹா பொலிஸார் கற்பாறைக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க…

Read More