உலக சாதனையை முறியடித்த பிரெஞ்சு நகரம்

மேற்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரம்,3,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட மிகப்பெரிய ஸ்மர்ஃப் உடையணிந்த மக்கள் கூட்டத்திற்கான புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டானியின் மேற்குப் பகுதியில் உள்ள 16,000 பேர் கொண்ட லாண்டர்னேவ், 2019 ஆம் ஆண்டில் 2,762 ஸ்மர்ஃப்களை ஒன்றிணைத்த ஜெர்மன் நகரமான லாச்ரிங்கனில் இருந்து சாதனையைப் பெற இரண்டு முறை முன்னர் முயற்சித்தது. தற்போது, பிரெஞ்சு ஆர்வலர்கள் இறுதியாக 3,076 பேரை நீல நிற உடைகள் அணிந்து,…

Read More

ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் உரையாற்றுகையில், தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள…

Read More

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்று அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.  தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள்,…

Read More

கட்டுநாயக்கவில் பிரபல தொழிற்சாலை மூடப்பட்டது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல், உதவியற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு- பிரதமர்

பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சேவையில் உள்ள ஆசிரியர்களின் ஓய்வு காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள், கஷ்டப் பகுதிகளில் உள்ள பாடங்களின் பன்முகத்தன்மை, பாட…

Read More

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நுவரெலியா நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வரையும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பம்பரகலை வரையும் இந்த அடர்ந்த பனிமூட்ட நிலை நிலவுகிறது. அவ்வப்போது ஏற்படும் அடர்ந்த பனிமூட்ட நிலை காரணமாக, இந்த வீதிகளில் வாகனங்களை இயக்கும்போது, வாகனங்களின்…

Read More

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி

தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது. வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு…

Read More

மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில்,…

Read More

மட்டக்களப்பு மார்க்கத்தில் தொடருந்து சேவை பாதிப்பு

மட்டக்களப்பு தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பகுதியில் தொடருந்து ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Read More

கம்போடிய தூதுவர் – பிரதமர் சந்திப்பு!

புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (16) சந்தித்தார்.  தூதுவர் ராத் மானியை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.  இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை தூதுவர் ராத் முன்மொழிந்தார். இது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை விளக்கினார்.  கம்போடிய சுற்றுலாப் பயணிகளுக்கு…

Read More