யாழ் – செம்மணி பகுதியில் விபத்து : இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில், மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

தெமட்டகொடையில் நபரொருவர் படுகொலை

தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவில பட்டுமக பகுதியில் நேற்று (13) மாலை, தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெமட்டகொடை பொலிஸ் நிலையத்துக்கு, ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்து தரையில் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இரவு நேர ரோந்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, காயமடைந்த நபரை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார். கொலை செய்யப்பட்டவர், மேம் பாலத்துக்கு அருகில் தங்கியிருந்த,…

Read More

துருக்கிக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. நிறுத்தப்பட்ட அப்பிள் இறக்குமதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் ‘துருக்கியைத் தடை செய்’ என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை…

Read More

பயணிகள் பேருந்துகள் தொடர்பில் விஷேட தீர்மானம்

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தூர சேவை பயணிகள் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தினமும் அதிகரித்து வருவது கவனிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் தூர சேவை பயணிகள் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தி, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், போதைப்பொருள்…

Read More

நாட்டின் இன்றைய வானிலை

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணியளவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…

Read More

பேருந்தின் சில்லில் சிக்கி ஆணும் இளம்பெண் ஒருவரும் பலி

மாத்தறை எலியகந்த பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஆணும் இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி, பேருந்தின் பின்புறச் சக்கரத்தின் கீழ் இருவரும் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில், மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், மாத்தறை காசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

Read More

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர். இதன்போது மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதே தந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்தநிலையில், சமனலவெவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை அளுத்நுவர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

Read More

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது : ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். இந்த தீர்மானமானது இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய படியாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது அறிக்கையில் குறிப்பிட்டார். ஒரு பாரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாகவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்க்க…

Read More

திபெத்தில் நில அதிர்வு

திபெத் நாட்டில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.41 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நில அதிர்வில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

Read More