பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை.

2025 ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.  அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ​மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

தேயிலை தோட்டத்திலிருந்து சடலமொன்று மீட்பு

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு 10ஆம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து நேற்றிரவு (11) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று காலை ஆட்டுக்கு புல் அறுக்க சென்றிருந்த நிலையில், இரவு ஏழு மணி வரை வீடு திரும்பவில்லை. பின்னர் தோட்ட மக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சடலம் சட்ட…

Read More

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். கல்னேவ காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின்செயல்பாடுகளைவிரிவுபடுத்த Breathe Free Lanka உடன்கைகோர்த்துள்ளது

Sunshine Holdings PLC இன் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான Cipla லிமிடெட்டின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Breathe Free Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. Cipla இலங்கையின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமாகும், மேலும் இந்த கூட்டு முயற்சி Ciplaவின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு மேலும் அணுகலாகவும் பரவலாகவும் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டு முயற்சி நாடு முழுவதும் உயர்தர…

Read More

நீர் சுத்திகரிப்பு வசதியை வழங்கி பரம்பொல சமூகத்தினரை வலுவூட்டும் பெரேரா அன்ட் சன்ஸ்.

பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) நிறுவனம், இலங்கையின் பெருநிறுவனத் துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான (CSR) மனுமெஹெவர திட்டத்தின் மூலம் நிலைபேறான தன்மை மற்றும் சமூக நல்வாழ்வு தொடர்பான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது. அந்த வகையில், நிறுவனத்தின் சமீபத்திய திட்டத்தின் கீழ், பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தில் உள்ள பரம்பொல சமூகத்திற்கு ஒரு அதிநவீன Reverse Osmosis (RO) (எதிர்த்திசை…

Read More

Fitch Upgrades Siyapatha Finance’s Ratings to ‘A(lka)’; Outlook Stable

Siyapatha Finance PLC’s National Long-Term Rating was recently upgraded to ‘A(lka)’ from ‘BBB+(lka)’ by Fitch Ratings, reflecting a positive evaluation of the institute’s robust financial profile, creditworthiness and firm linkage maintained with its parent bank. Siyapatha’s upgraded rating is attributed to the steady growth of the company’s financial profile amidst socio-economic shocks, reflecting the entity’s…

Read More

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு

பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கிரிப்டோகரன்சி வணிகங்களுக்கான விளம்பரங்கள் தவறானவை என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த மோசடி விளம்பரங்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் போலி விளம்பரங்களை ஊக்குவிப்பதற்குப் பின்னால் வெளிநாட்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் இந்த நாட்டில் பிரபலங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உடைப்பதே இதன் நோக்கம் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும்…

Read More

சட்டவிரோதமாக ராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் கைது.

சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய 875 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 704 வீரர்களும், இராணுவத்திலிருந்து தப்பியோடிய இரண்டு அதிகாரிகளும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடற்படையினரிடமிருந்து தப்பிச் சென்று கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் விமானப்படையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறிய 100 பேரும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்

சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உக்ரைன் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா இன்னும் தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More