ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

சிங்கராஜ வனப்பகுதியில் காட்டுத்தீ.
நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஹட்டன் சிங்கராஜ வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் சபையின் ஹட்டன் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு குடிநீர் வழங்கும் சிங்கராஜ நீர்த்தேக்கத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற ஒரு தனிநபர் அல்லது குழுவால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.