இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில் சாபக்கேடாக மாறும் சிறுநீரக நோய்!
இலங்கையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோயினால்ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். கடந்த 10வருடங்களில் இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதோடு, சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் நாட்டில் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் வெளியிட்ட தகவலில் வெளியிடப்பட்டுள்ளது. உடனடி சிகிச்சை பெறமுடியாத நாள்ப்பட்ட சிறுநீரக நோயாளர்களே இவ்வாறு மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற…