வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடொன்றிற்குள் புகுந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல், அங்கு தனியாக இருந்த இளம் தாயையும் குழந்தையையும் அச்சுறுத்தி சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளது. பெண்ணின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு வந்த முதியவர்கள் மீது இக்கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரு முதியவரின் கை விரல் துண்டிக்கப்பட்டதுடன், மற்றுமொரு வயோதிப தம்பதியினர் முழங்காலிட வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த அட்டகாசத்தின் பின் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த…

Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 970 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 963 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 344 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 471 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01  கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  78  கிலோ  496 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 8033 கஞ்சா…

Read More

கடற்படை வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு!

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, கடற்படை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை நடத்தியதுடன், மேலும் அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி வடமேற்கு கட்டளை கடற்படை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மன்னார் இரத்தமாற்ற மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த…

Read More

பல மணி நேரம் ஆகாயத்தில் வட்டமிட்ட துருக்கி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் :

கொழும்பில் இருந்து, துருக்கி, இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம் இலங்கை வான் பரப்பில் பல மணிநேரம் வட்டமிட்டபின் இன்று அதிகாலை 12.27 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் எவருக்கும் எவ்வித சேதங்களும் இல்லையென விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  விமானத்தின் தரையிறங்கும் கியரில் (Landing Gear) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது இன்று அதிகாலை (டிசம்பர் 17, 2025) பண்டாரநாயக்க சர்வதேச…

Read More

போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்கிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read More

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. விவசாய ஓய்வூதியதாரர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் அரச வேலை நாட்களில் தமக்குரிய தபால் நிலையங்கள் அல்லது உப தபால் நிலையங்கள் ஊடாகத் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்…

Read More

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : தாய்லாந்து பெண்கள் உட்பட ஏழு பேர் கைது!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தாய்லாந்து பெண்கள் உட்பட ஏழு பேர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, விபச்சார விடுதிக்கு உதவியதாக கூறப்படும் ஒரு சந்தேக நபரும் ஆறு தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்…

Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 239 கிராம் ஹெரோயின், 678 கிராம் ஐஸ், 04 கிலோகிராம் 282 கிராம் கஞ்சா, 84 கஞ்சா செடிகள், 420…

Read More

சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15) நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த அதி சொகுசு கப்பலானது நேற்றைய தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மால்டா, அரசாங்க கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட  242 மீட்டர் நீளமுள்ள “லுமினாரா” என்ற அதி சொகுசு கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை…

Read More

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் – விசேட பொலிஸ் பாதுகாப்பு

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,   பண்டிகை காலத்தில் நகர் பகுதிகளிலும் வழிபாட்டு தலங்களிலும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேல்மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2,500 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ்…

Read More